search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர் கோவில்"

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டாதது ஏன்? தேர்தலுக்காகவே இந்த பிரச்சினையை எடுக்கிறார் என்று மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #PMModi
    ராய்கஞ்ச்:

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நேற்று தனது மாநிலத்தில் ராய்கஞ்ச், இஸ்லாம்பூர் உள்பட சில இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்முறைகள் மற்றும் குழு கொலைகள் மூலம் அரசியலுக்குள் வந்தவர் மோடி. அவர் பாசிஸ்டுகளின் ராஜா. அடால்ப் ஹிட்லர் உயிரோடு இருந்திருந்தால், மோடியின் நடவடிக்கைகளை பார்த்து தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுதியாக போராட தவறிவிட்டது. அதனாலேயே பா.ஜனதா படிப்படியாக வலுவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பினால் மற்றவர்களின் உதவியை நாட வேண்டும்.



    மோடியை வெளியேற்றவே ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மோடி வெளியேற்றப்பட்டதும் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க பணியாற்றுவோம். கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிரான தனது போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடாது.

    கடந்த 5 ஆண்டுகளாக மோடியால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை. ஆனால் தேர்தல் வரும்போதெல்லாம் அவர் இந்த பிரச்சினையை எடுப்பார். மக்கள் முட்டாள்கள் இல்லை. ஒவ்வொரு முறையும் உங்களால் மக்களை ஏமாற்ற முடியாது.

    ராணுவமே அவருக்கு சொந்தமானதுபோல ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளின் பெயரால் மோடி இப்போது ஓட்டு கேட்கிறார். அது அவர் ஆற்றிய ராணுவ சேவைக்கான மானியமா? ஆயுதப்படைகள் அனைவருக்கும் சொந்தமானது. இது நமது பெருமை.

    உளவுப்பிரிவினர் தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்த பின்னரும் புலவாமா தாக்குதலில் இத்தனை வீரர்கள் கொல்லப்பட்டது ஏன் என்பதற்கு அவர் முதலில் பதில் கூற வேண்டும்.

    நரேந்திர மோடி துரியோதனன் என்றால் அமித்ஷா துச்சாதனன். இருவரும் சேர்ந்து நாட்டின் சுதந்திரத்தை பறிக்கப் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
    ராமஜென்ம பூமியான அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டாமல் மெக்கா, மதினா அல்லது வாடிகன் நகரிலா கட்ட முடியும்? என யோகாசன குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். #RamTemple #BabaRamdev
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், கேடர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற யோகாசன முகாமில் பங்கேற்ற பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ராமர் பிறந்த இடம் அயோத்திதான் ராமஜென்ம பூமி என்பது சர்ச்சைகளுக்கு இடமில்லாத உண்மையாகும். ராமர் இந்து மக்களுக்கு மட்டும் மூதாதையர் அல்ல முஸ்லிம்களுக்கும் அவர்தான் மூதாதையர்.

    ராமர் கோவில் கட்ட வைக்கப்பட்டுள்ள கல் தூண்கள்

    ராமருக்கு கோவில் கட்டுவது நமது நாட்டுக்கான பெருமிதம். அயோத்தியில்தான் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அயோத்தியில் இல்லாவிட்டால் வேறெங்கு ராமருக்கு கோவில் கட்ட முடியும்?. மெக்காவிலோ, மதினாவிலோ, வாடிகன் நகரிலோ நிச்சயமாக நம்மால் ராமருக்கு கோவில் கட்டவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #RamTemple  #BabaRamdev
    அயோத்தியில் இந்த ஆண்டுக்குள் அல்லாஹ்வின் ஆசியுடன் ராமர் கோவில் கட்டப்படும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். #Ramtemple #blessingsofAllah #BukkalNawab
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்ற மேல்சபையில் பா.ஜ.க. உறுப்பினராக பதவி வகிப்பவர், புக்கால் நவாப். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் ராமருக்கு தங்கத்தால் கிரீடம் செய்வதற்கு 15 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக முன்னர் இவர் தெரிவித்திருந்தார்.

    தனது நேர்த்திக்கடன் ஹனுமானால் பூர்த்தியானதற்கு நன்றி தெரிவிப்பதாக 30 கிலோ எடைகொண்ட பித்தளை மணியை ஹனுமான் கோவிலுக்கு புக்கால் நவாப் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.



    மேலும், அர்மான், ரஹ்மான், ரம்ஜான், பர்சான் என்னும் பெயர்களைப்போல ஹனுமான் என்ற பெயரும் உள்ளதால் ஹனுமான் ஒரு முஸ்லிம் என்று நம்புவதாகவும் இவர் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அல்லாஹ்வின் ஆசியுடனும் பா.ஜ.க.வினரின் முயற்சியாலும் அயோத்தியில் இந்த ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் என தற்போது தெரிவித்துள்ள புக்கால் நவாப், மோடியின் பிரபலத்தை கண்டு அச்சப்படும் எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை வீழ்த்தும் ஒரே நோக்கத்துக்காக சுயநலக் கூட்டணி அமைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். #Ramtemple #blessingsofAllah #BukkalNawab
    அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே வலியுறுத்தி உள்ளார். #VHP #RamTemple
    இந்தூர்:

    விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அயோத்தி வழக்கு, நீண்டுகொண்டே செல்லும் என்று கருதுகிறோம். இப்போதைக்கு தீர்வு ஏற்படாது. மத நம்பிக்கைகள், கோர்ட்டின் ஆய்வுக்கு உட்பட்டது அல்ல. ராமர் அயோத்தியில் பிறந்தாரா? இல்லையா? என்பதை கோர்ட்டு தீர்மானிக்க முடியாது.



    எனவேதான், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அரசியல்தான் ராமர் கோவில் கட்ட முட்டுக்கட்டையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #VHP #RamTemple

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #amitshah #bjp #parliamentelection
    அகர்தலா:

    திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்தவித சவாலும் இல்லை. நாங்கள் 300 இடங்களில் எளிதில் வெற்றி பெறுவோம்.

    மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 50 இடங்கள் வரை கைப்பற்றுவோம்.

    அனைத்து மாநில பா.ஜனதா தலைமையிடம் கருத்து அறிந்த பிறகு அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

    ராமர் கோவில் விவகாரத்தில் சட்டப்படி முடிவு மேற்கொள்ளப்படும். காங்கிரசின் மெகா கூட்டணியால் மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்க போவதில்லை.

    இந்த தேர்தலில் வளர்ச்சி, பாதுகாப்பு, நாட்டின் சுயமரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 282 இடங்களை கைப்பற்றி இருந்தது. #amitshah #bjp #parliamentelection
    சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும். நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான்.

    பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) துணிச்சலான நடவடிக்கை. இந்த துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவர்களில்
    எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



    ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார். அவர் சொந்த காரணங்களுக்காகவே பதவி விலகினார்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர். நாட்டை நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என உரிமை கோரும் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது. #SCtohear #RamJanmabhoomidispute #BabriMasjidtitle #BabriMasjidtitle
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் மேற்படி நிலத்தை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி இந்த நிலம் யாருக்கு சொந்தமானது? என தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் முன்னர் நிராகரித்து விட்டது. 

    இதே கோரிக்கையுடன் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு விசாரணையை கோர்ட் ஒத்திவைத்தது.

    இதற்கிடையே, ராமர் அயோத்தியில் கோவிலை கட்டும் முனைப்பில் பல அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டதாக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என உரிமை கோரும் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.

    அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இம்மனு விசாரிக்கப்படும். பின்னர், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SCtohear #RamJanmabhoomidispute #BabriMasjidtitle #BabriMasjidtitle 
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. #RajnathSingh #RamTemple #BJP
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. பொறுமை காக்குமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அடுத்த ஆண்டுதான் இது விசாரணைக்கு வருகிறது.

    ஆனால் அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் சட்டம் இயற்றி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்துத்துவா அமைப்புகளின் உணர்வுகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இருந்தாலும்கூட, சட்டம் இயற்றும் முடிவுக்கு அந்தக் கட்சி வரவில்லை.

    இருப்பினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சிக்குள் கருத்து எழுந்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ளவில்லை.

    இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவீந்திர குஷ்வாகா, ஹரி நாராயண் ராஜ்பார் ஆகியோர் அயோத்தி பிரச்சினையை எழுப்பி பேசினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அவர்களின் பேச்சுக்கு பிற எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    ஆனால் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங், “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமும் ஆகும். அதே நேரத்தில் உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு சமமாக எதிர்க்கட்சியில் ஒரு தலைவர் கிடையாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எம்.பி.க்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். #RajnathSingh #RamTemple #BJP


    வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் வலியுறுத்தியுள்ளார். #RamTemple #RamTempledemand #BhaiyyajiJoshi
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் இன்று மாபெரும்  பேரணியும், ராம்லீலா மைதானத்தில் தர்மசபை மாநாடும் நடைபெற்று வருகிறது. 

    இந்த பேரணியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி பாராளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியிலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக இந்த கோரிக்கையை சுரேஷ் பய்யா ஜோஷி இன்று முன்வைத்துள்ளார்.

    நாங்கள் இதை யாரிடமும் யாசகமாக கேட்கவில்லை. இந்த நாட்டுக்கு ராமராஜ்ஜியம் தேவை என்ற மக்களின் உணர்வுகளைதான் நாங்கள் எதிரொலிக்கிறோம். 

    இன்று ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கருத்தை உணர்ந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் முன்வர வேண்டும்.
    நாங்கள் எந்த சமுதாயத்தினருடனும் மோதலில் ஈடுபடவில்லை. சட்டத்தின் மூலமாக ராமர் கோவிலை சாத்தியப்படுத்துவதுதான் ஒரேவழி. இதை நிறைவேற்றும் வரை ராமர் கோவில் தொடர்பான இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். #RamTemple #RamTempledemand #BhaiyyajiJoshi
    எந்த தேர்தலிலும் பா.ஜ.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜெயிக்க முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #bjp #election

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் மேகதாது அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் இந்த அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை மற்றும் திட்ட அறிக்கையை அனுப்புவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது மன்னிக்க முடியாத தமிழகத்திற்கு இழைக்கப்படும் கேடாகும்.

    கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விவசாயம் அழிந்துவிட்டது. ஒன்றரை லட்சம் விவசாயக் குடும்பங்கள் அடியோடு அழிந்துவிட்டன. இனி அவர்களால் எழ முடியாது.

    இதற்கு குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் கோடியாவது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் ரூ. 353 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.


    பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் அதன் சரத்துக்கள் அடியோடு அழிக்கப்படும்.

    ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறி வருகின்றனர். இதன் மூலம் ஒரு ரத்தக்களரி ஏற்படுத்த நினைக்கின்றனர்.

    எந்த ஒரு பாசிசவாதியும் அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள். ஏதாவது ஒரு வி‌ஷயத்தின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வர். பிரதமர் மோடியும் பாசிஸ்ட் ஆக மாறி வருகிறார்.

    எந்த தேர்தலிலும் பா.ஜ.க. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜெயிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #vaiko #bjp #election

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்: 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் கோட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணை தலைவர்கள் பழனிசாமி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   #Ayodhya #Ramtemple 
    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார். #RamTemple #VHP #Delhi
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராமலீலா மைதானத்தில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார்.

    டெல்லியில் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், “ராமர் கோவில் கட்டுவதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம். அந்த அளவுக்கு ராமர் கோவிலுக்கு எதிரானவர்களின் மனதையும் எங்கள் பொதுக்கூட்டம் மாற்றிவிடும்.

    ஒருவேளை மசோதா கொண்டுவரப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அலகாபாத் கும்பமேளாவின்போது முடிவு செய்யப்படும்” என்றார். 
    ×